சூப்பர் நோவாவாக வெடிக்கப்போகும் AG Carinae

விரைவில் சூப்பர் நோவாவாக வெடிக்கப்போகும் AG Carinae நட்சத்திரம்.
போன மாதம் ஏப்ரல் 24-ம் தேதியோடு Hubble space telescope விண்ணுக்கு ஏவப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகுது. இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக NASA ஒரு பிரகாசமான நட்சத்திரத்தை படம் எடுத்திருக்காங்க.
AG Carinae என்று சொல்லப்படுகின்ற நட்சத்திரம் அழியக் கூடிய நிலைமையில் இருக்கிற ஒரு நட்சத்திரம்.
ஒரு நட்சத்திரம் அதன் எரிபொருள் தீர்ந்த உடனே ஈர்ப்பு விசை அழுத்தத்தை தாங்க முடியாமல், ஒரு சூப்பர் நோவாவாக வெடிக்கும். இந்த வெடிப்புக்கு முன்னாடி அது கொஞ்சம் கொஞ்சமா அதோட மேல்பரப்பை தூக்கி வீசி எறிஞ்சிட்டு இருக்கும்.
AG Carinae சுத்தி ஒரு புகை மூட்டத்தை நம்மளால பாக்க முடியும், இந்த புகைமூட்டம் AG Carinae நட்சத்திரத்தை தள்ளி சுமார் ஐந்து ஒளியாண்டுகள் தூரத்தில் சுற்றி பறந்து இருக்கு.
இந்த தூரம் நம்ம சூரியனுக்கும் நம்ம சூரியனுக்கு பக்கத்துல இருக்குற Proxima Centauri நட்சத்திரத்துக்கும் இருக்கிறது தூரம்.
இந்த புகைமூட்டங்கள் சுமார் 10000 வருடங்களுக்கு முன்னாடி நடந்த வெடிப்புகளால் உருவானது. இந்த வெடிப்புகள் மூலம் வெளியிடப்பட்ட பொருட்களின் எடை மொத்தமா நம்ப சூரியனோட எடையை விட பத்து மடங்கு அதிகம்.
இது பொன்ற வெடிப்புகள் வெவ்வேறு அளவுகளில் நிகழ்வதால் AG Carinae நட்சத்திரத்தை Luminous Blue Variable நட்சத்திரம் என விஞ்ஞானிகள் வகைப்படுத்தி இருக்காங்க. இது நம்ம பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
இந்த வெடிப்புகள் தவிர AG Carinae நட்சத்திரத்தில் இருந்து அதிசக்தி வாய்ந்த ரேடியேஷன் மற்றும் நட்சத்திர காற்றும் வெளியகி கொண்டு இருக்கு.
மேலிம் இந்த நட்சத்திர காற்றும் AG Carinae-வை சுத்தி இருக்குற நேபுலா வடிவத்தை தொடர்ந்து மாதிரி கொண்டே இருக்கு. இந்த நட்சத்திர காற்று மணிக்கு சுமார் 10 லட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும்.
இந்த அதிபயங்கர வேகத்தால், AG Carinae சுற்றி இருக்கும் நேபுலா மணிக்கு சுமார் ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் விரிவடைகிறது.
- Hubble எடுத்த புகைப்படத்தில் சிவப்பு நிறங்களை இருக்கிற பகுதிகள் ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் வாயுவும் இருக்கிற பகுதிகள்,
- நீல நிற பகுதிகள் AG Carinae நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் தூசி மேகங்கள்.
இந்த Luminous Blue Variable வகைகளை சேர்ந்த நட்சத்திரங்கள் மிகவும் அரிதானது. நம்ம மில்கிவே கேலக்ஸியில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஐம்பது நட்சத்திரங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.
இது போன்ற Luminous Blue Variable நட்சத்திரங்கள் ஆய்வு செய்வதன் மூலம் நம் யுனிவர்சல் இருக்குற கெமிக்கல் எலிமெண்ட்ஸ் எப்படி உருவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியும்.
இதுவரைக்கும் நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் ஒளியை வைத்து மட்டுமே நாம் பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளோம்.
About

- பொருளின் பெயர் : AG Carinae, HD 94910
- பொருள் விளக்கம் : இது ஒரு Luminous blue variable
- விண்மீன் திரள் (Constellation) : Carina
- தூரம் : பூமியிலிருந்து சுமார் 20,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது | நெபுலா சுமார் 5 ஒளி ஆண்டுகள் முழுவதும் உள்ளது.