Find the mass value of binary stars.
Binary நட்சத்திரங்களின் Mass Value எவ்வாறு கண்டுபிடிப்பது.
நம்ம யூனிவர்ஸில் பல நட்சத்திரங்கள் உள்ளன இந்த நட்சத்திரங்கள் ரொம்ப தொலைவில் உள்ளதால், அதில் இருந்து வரும் ஒளியை வைத்து மட்டும்தான் நம்மால் ஆராய்ச்சிகள் செய்ய முடியும்.
நட்சத்திரங்களோடு ஒலியை தவிர அது அருகில் மற்றொன்று நட்சத்திரமும் இருந்தால், அந்த நட்சத்திரங்களை பற்றிய ஆராய்ச்சிகளை அதுக்கு நடுவுல் இருக்கும் ஈர்ப்பு விசை மாற்றங்களை வைத்து நாம்மால் சுலபமாக கண்டுபிடிகளாம்.
அப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சி மூலம் தான் நட்சத்திரங்களுடைய எடையை ஆராய்சியாலர்கள் கண்டுபிடிப்பார்கள். நம்மை யுனிவர்ஸில் பல நட்சத்திரங்கள் உள்ளது, அதில் 85 சதவீதம் நட்சத்திரங்கள் Binary நட்சதிரங்கள்.
இந்த Binary நட்சத்திரக் குடும்பங்கள் விண்வெளி ஆய்வாளர்களுக்கு ரொம்ப உதவியாக உள்ளது. இந்த நட்சத்திரக் குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்களின் இடையே இருக்கும் ஈர்ப்பு விசை மாற்றங்களை வைத்து அதிகமான தகவல்களை கண்டுபிடிக்க முடியும்.
எடையை கணிக்கும் முறை:
நட்சத்திரங்களின் எடை, Binary நட்சத்திர குடும்பங்களில் இருக்கும் நட்சதிரங்களின் எடையை கண்டுபிடிக்க கீழ்கண்ட இரண்டு முறையை பயன்படுத்தலாம்.
- நட்சதிரங்களுக்கு இடையில் உள்ள தூரம்.
- ஒன்றைஒன்று சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நாட்கள்.
இந்த இரண்டு முறையை வைத்து நம்மால் நட்சத்திரங்களுடைய எடையை கண்டுபிடிக்க முடியும்.
அருகில் உள்ள Binary நட்சத்திரம்
இந்த ஆராய்ச்சியை நாம்கூட முயற்சி செய்து பார்க்கலாம். உதாரணத்துக்கு இரவு வானத்தில் தெரிகிற ரொம்ப பிரகாசமான நட்சத்திரமான சீரியஸ் எடுத்துக்கொள்வோம்.
சீரியஸ் நட்சதிரம் நாம் வெறும் கண்காளால் பார்க்கும் போது ஒரே நட்சத்திரமாக தெரிந்தாலும், அது ஒரு Binary நட்சத்திரம். அதாவது இரண்டு நட்சத்திரம் ஒன்றோடு ஒன்று சுற்றி கொண்டிருக்கும் ஒரு பைனரி நட்சத்திர குடும்பம்.
ஒரு சின்ன டெலஸ்கோப் இருந்தால் கூட இந்த இரண்டு நட்சத்திரங்களையும் உங்களால் பார்க்க முடியும். இதில் பிரகாசமாக இருக்கும் நட்சத்திரத்தின் பெயர் சீரியஸ் A, மற்றொன்று சீரியஸ் B.
சீரியஸ் A நம் சூரியனை விட இரண்டு மடங்கு அதிக எடையுடை கொண்டது. சீரியஸ் B ஒரு White Dwarf, இந்த இரண்டு நட்சதிரங்களும் ஒன்றைஒன்று சுமார் 20 AU தூரம் இடைவெளியில் சுற்றி வருகின்றன.
இந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒருமுறை முழுமையாக சுற்றிவர கிட்டத்தட்ட 50 பூமி வருடங்கள் எடுத்து கொள்ளும்.
Kepler’s Third Law Formula
இந்த தகவலை தெரிந்து கொள்ள Kepler’s Third Law மூலம் இந்த Binary நட்சத்திர குடும்பத்தின் முழு எடையை நம்மல் தெரிந்துகொள்ள முடியும்.
Formula:
நட்சத்திரங்களின் தனி எடையை கணிக்கும் முறை
அடுத்து இந்த இரண்டு நட்சத்திரங்களின் தனித்தனி எடையை கண்டுபிடிக்க இந்த இரண்டு நட்சத்திரங்களும் அதோட பெரிசென்டர்(Pericenter)-ல் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
சீரியஸ் B அதனுடைய Pericenter-ல் இருந்து, சீரியஸ் A இருகின்ற தூரத்தை விட சுமார் இரண்டு மடங்கு தூரத்தில் உள்ளது.
இதன் மூலம் சீரியஸ் A, சீரியஸ் B விட இரண்டு மடங்கு எடை கொண்டது என்று நாம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
Binary நட்சத்திர குடும்பங்களின் எடைய கண்டுபிடிப்பது ரொம்பவும் சுலபமான விஷயம் ஆகும்.
ஆனா நம்ம யூனிவர்ஸில் நம்ம சூரியன் போல தனி நட்சத்திரங்களும் உள்ளது. இந்த நட்சத்திரங்களுடைய எடையை அதனுடைய பிரகாச அளவை வைத்து கண்டுபிடிக்க முடியும்.
நாம் ஒளியை வைத்து மட்டும் தான் ஆராய்ச்சிகளை செய்துகொண்டு உள்ளோம். விண்வெளியை பற்றி நாம் கண்டுபிடிக்க வேண்டியது இன்னும் பல விசயங்கள் உள்ளன.
எதிர்காலத்தில் விண்வெளியில் பயணம் செய்து விண் பொருட்களுக்கு அறுகில் சென்று ஆராய்ச்சிகளை செய்வதன் மூலம் இன்னும் பல தகவல் தெரிந்துகொள்ள முடியும்.