Orion Nebula Facts in Tamil
Orion Nebula Facts
நம்ம யுனிவர்சிட்டில நிறைய அழகான பல விண் பொருட்கள் உள்ளது. இதில் பலவற்றை நம் டெலஸ்கோப் மூ்லமாக மட்டுமே பார்க்க முடிவும்.
இருந்தாலும், ஒரு சில வின் பொருட்களை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியும். இப்ப இருக்கும் Light Pollution காரணத்தால் இரவு வானத்தில் விண் பொருட்களை நம்மால் தற்போது பார்க்க முடியாது.
நம் கண்களால் பார்க்க முடியாமல் போன விண் பொருள் தான் Orion Nebula. இது நம் MilkyWay-ல் உள்ள ஒரு டிஸ்யூஸ் Nebula ஆகும. இது Orion Constellation-ல் உள்ளது.
Orion Nebula மெஸ்ஸியர் 42, எம் 42, அல்லது என்ஜிசி 1976 என்றும் அழைக்கப்படுகிறது
நாம் வெறும் கண்களால் பார்க்க கூடிய அழகான பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த Nebula 24 ஒளி ஆண்டுகள் தூ்ரம் நீளம் கொண்டது.
இது நம்ம பூமியிலிருந்து சுமார் ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள. பூமிக்கு அருகில் நட்சதிரங்கள் உருவாகும் இடம் இந்த Orion Nebula ஆகும்.
மேலும் நட்சத்திரங்கள் எப்படி உருவாகிறது என்பதை பற்றி இந்த Orion Nebula மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.
இது வரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகளில் Orion Nebula-வில் பல Protoplanetary Disk மற்றும் Brown Dwarf-களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இதுதவிர Hubble Space Telescope எடுத்த புகைப்படங்கள் மூலமா ஹைட்ரஜன் சல்ஃப்பர் மற்றும் ஹைட்ரோகார்பன் வாயுக்கள் அங்கு உள்ள நட்சத்திரங்களை சுற்றி சூழ்ந்து உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
Orion Nebula நட்சத்திரங்கள் உருவாகும் ஒரு இடம், இதில் பல ஆய்வுகள் மூலமாக விஞ்ஞானிகள் கிட்டதட்ட 700 நட்சத்திரங்கள் உருவகி கொண்டுள்ளன என்று கண்டுபிடித்துள்ளனர்.
1993-ம் ஆண்டு Hubble Space Telescope மூலம் செய்த ஒரு ஆய்வில் Planetary Disk-கள் கண்டுபிடிக்கப்பட்டது.
Planetary Disk என்பது புதிதாக உருவாகியுள்ள நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் ஒரு டிஸ்கி வடிவம் கொண்ட தூசி மேகங்கள் ஆகும்.
இதுவரைக்கும் Orion Nebula-வில் சுமார் 150 Protoplanetary Disk-கள் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்த 150 Protoplanetary Disk-கள் நம்ம சூரிய குடும்பம் போல தனி நட்சத்திர குடும்பமாக உருவாகும்.
மேலும் தவிர நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் காற்றினால் ஏற்படும் அதிர்வலைகளையும் நம்மால் Orion Nebula-ல் பார்க்க முடியும்.
Orion Nebula-வை நன்றாக ஆய்வு செய்வதன் மூலமாக நம்ம சூரிய குடும்பம் எப்படி உருவாகியது என்று நாம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
ஓரியன் எவ்வாறு கண்டறிவது:
நவம்பர் முதல் பிப்ரவரி வரை இரவு வானத்தில் Orion Nebula தெளிவாகத் தெரியும். நீங்கள் வடக்கு அரைக்கோளம் அல்லது தெற்கு அரைக்கோளத்தில் இருந்து பார்த்தால் தெரியும். அதாவது வடமேற்கு வானத்தில் இருந்தால் Orion Nebula தென்மேற்கு வானத்தில் தெரியும்.
(Orion Constellation)ஓரியன் விண்மீன் தொகுப்பில் மிக முக்கியமான நட்சத்திரங்களான Alnilam, Mintaka மற்றும் Alnitak ஆகியவை ஆகும்.
இரண்டாவது பிரகாசமான நட்சத்திரமான ( Betelgeuse)பெட்டல்ஜியூஸ், ஓரியனின் வலது புரத்தில் அமைந்துள்ளது. Bellatrix ஓரியனின் இடது புரத்தில் உள்ளது.
Orion Nebula என்பது (Orio belt) ஓரியனின் பெல்ட்டுக்கு கீழே அமைந்துள்ள ஒரு பச்சை நிற நெபுலா ஆகும்.