The first recorded supernova in history.
The First Supernova in History | வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் சூப்பர்நோவா.
History-ல் பதிவு செய்யப்பட்ட First Supernova நிகழ்வு பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இரவு வானத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு பின்னால் ஒரு பெரிய கதை உள்ளது. அந்த நட்சத்திரம் உருவானதிலிருந்து, அழியும் வரைக்கும் நம்மால் கணித்து கூற முடியும். நம்ம சூரியன் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் நிறைய இருந்த ஒரு புகை மூட்டத்தில் இருந்து உருவானது.
தற்போது நனது சூரியன் Nuclear fusion உதவியோட இது வரை இயங்கிகொண்டு உள்ளது.
இன்னும் 500 கோடி வருஷங்கள் கழித்து நம்ம சூரியனோடு எரிபொருள் மூழுமையாக தீர்ந்த பிறகு, அது ஒரு Red Giant -ஆக மாரும். அதுக்கப்பறம் ஒரு Wight Dwarf -ஆக உருமாறும்.
நம் சூரியனுடைய எடை ரொம்ப குறைவாக இருப்பதால் அது சூப்பர்நோவா வெடிக்காது.
அதேபோல், நம்ம சூரியனை விட பல மடங்கு அதிக எடையுடைய ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அது ஒரு Supernova-வாக வெடிக்கும்.
இந்த வெடிப்பு அந்த நட்சத்திரத்தை சிதறடித்து ஒரு Nebula-வை உருவக்கும், அந்த Nebul-வில் ஒரு புதிய நட்சத்திரம் உருவாகும்.
இரண்டு ஆண்டுகள் நீடித்த Supernova
ஒரு Supernova-யை நம் வாழ்நாளில் பார்ப்பது ரொம்ப கடினம். ஆனா 1054 ஆம் ஆண்டு வாழ்ந்த மக்கள் இரவு வானத்தில் ஒரு சூப்பர் நோவா வெளிச்சத்தை பார்த்துருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த வெளிச்சம் இரண்டு ஆண்டுக்கு நீடித்தது என்று கூறப்படுகின்றது. மேகும், இந்த வெளிச்சம் பகல் நேரத்திலும் பார்க்கக்கூடிய அளவுக்கு பிரகாசமாக இருந்தது.
இந்த வெளிச்சத்தை பார்த்த சீன விண்வெளி ஆய்வாளர்கள் இந்த வெளிச்சத்தை திடீர்னு உருவான ஒரு நட்சத்திரம் என்று குறித்து வைத்துள்ளனர்.
மேலும் இந்த வெளிச்சத்தை ஜப்பானில் வாந்த மக்களும் அவர்களின் வரலாற்று குறிப்பு பற்றின தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளனர்.
என்னதான் இந்த வெளிச்சத்தை ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே பார்க்கப்பட்டாலும், அது என்னன்னு அவர்களுக்கு தெறியவில்லை.
Messier Catalog
சுமார் 700 வருஷத்துக்கு அப்புறம் Charles Messier என்ற விண்வெளி ஆய்வாளர் வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் போது, Supernova-வில் இருந்து வரும் ஒலியை வால்நட்சத்திரம் என்று நினைத்தார். இரண்டு நாட்கள் பிறகுதான் அது ஒரு வால் நட்சத்திரம் என்று தெரிய வந்தது.
அவரின் வேலையை சுலபமாக்க அவர் Messier Catalog என்ற ஒன்றை உருவாக்கினார். இந்த Catalog-ல் வால் நட்சத்திரங்கள் இல்லாத வின் பொருட்களை அவர் வகைப்படுத்தினார்.
இந்த வகைப்படுத்தப்பட்ட Catalog-ல உள்ள முதல் விண் பொருள் 1054 ஆம் வருஷம் ஏற்பட்ட சூப்பர்நோவா மூலம் உருவான Nebula. இதனால் இந்த Nebula-வை Messier 1 என்று கூறுவார்கள்.
Messier 1 Nebula ஆய்வுகள்
Charles Messier பொன்ற நிறைய விண்வெளி ஆய்வாளர்கள் இந்த Nebula-வை அவங்களின் டெலஸ்கோப் மூலம் ஆய்வு பண்ண தொடங்கினர்.
1844 ஆம் ஆண்டு William Parsons என்ற ஒரு விண்வெளி ஆய்வாளர் அவருடைய 36″ டெலஸ்கோப்பை வைத்து Messier 1 Nebula-வை ஆய்வு செய்யும் போது அது ஒரு நண்டு மாதிரி இருந்ததால் Crab Nebula என்று பெயர் வைத்தார்.
1928-ஆம் வருஷம் Edwin Hubble என்ற ஆய்வாளர் தான் முதல் முறையா, 1054 ஆம் வருஷம் நடந்த ஒரு வெடிப்பினால் உருவான Nebula தான் Crab Nebula என்று கனித்தார்.
Crab Nebula | Messier 1 Stars
1942-ம் வருடம் Rudolph Minkowski என்ற விண்வெளி ஆய்வாளர் Crab Nebula மையத்தில் இரண்டு நட்சத்திரங்கள் உள்ளது, இதில் ஒன்று தான் Crab Nebula உருவாக காரணமாக இருந்தது என்று கண்டுபிடித்தார்.
இந்த நட்சத்திரம் அளவுக்கு அதிகமான Radio waves மற்றும் Gamma Rays-களை வெளியிட்டது.
1960களில் Pulsar வகை நியூட்ரான் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, Crab Nebula ஆய்வு செய்யப்பட்டது.
1968ஆம் வருடம் Crab Nebula நடுவில் இருக்குற நட்சத்திரம் ஒரு Pulsar என்று Franco Pacini என்ற விண்வெளி ஆய்வாளர் உறுதிப்படுத்தினார்.
இந்த Crab Pulsar இருந்து வறும் வெளிச்சம் தான் Crab Nebula-வை இன்னும் கூட ஒளிர வைகின்றது என்று அவர் கண்டுபிடித்தார்.
Crab Nebula வாயுக்கள்
இந்த Crab Nebula-ல் ஹைட்ரஜன், ஹீலியம், கார்பன், ஆக்சிஜன் நைட்ரஜன், அயன், நியான் மற்றும் சல்பர் வாயுக்கள் உள்ளன. இந்த வாயுக்கள் சுமார் 11 ஆயிரம் டிகிரி செல்சியஸில் முதல் 18 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக இருக்கும்.
Crab Nebula தூரம்
இந்த Crab Nebula நம் பூமியிலிருந்து சுமார் 7 ஆயிரம் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.
இந்த Crab Nebula நொடிக்கு 1500 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் விரிவடைந்து கொண்டு உள்ளது.
Crab Nebula மையத்தில் இருக்கும் நட்சத்திரம் ஒவ்வொரு 33 Milliseconds ஒருமுறை Electromagnetic radiation வெளியீட்டுகொண்டு இருக்கு.
ஒரு டெலஸ்கோப் இருந்தால், இந்த Crab Nebula-வை யார் வேண்டுமானலும் பார்க்க மூடியும். Messier Catalog இருக்குற அனைத்துப் பொருட்களையும் நம்ம டெலஸ்கோப் மூலம் பார்க்கலாம்.