3rd Century Supernova Eruption.
3 ஆம் நூற்றாண்டு சூப்பர்நோவா வெடிப்பு
3 ஆம் நூற்றாண்டு அன்று பிரகாசமான ஒரு ஒளி பூமியோட தெற்குப் பக்கத்தில் இருக்கும் மக்களுக்கு வானத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த வெளிச்சம் ஒரு நட்சத்திரம் சூப்பர்நோவா வெடிப்பால் உருவான வெளிச்சம். பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த நிகழ்வ ஒரு கெட்ட சகுனமா கருதனாக.
அப்படிப்பட்ட ஒரு சூப்பர் நோவா வெடிப்பு மூன்றாவது சென்சரில் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
இந்த சூப்பர் நோவா வெடிப்பு பூமியோட தெற்கு பக்கம் உள்ள மக்களுக்கு மட்டும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சூப்பர் நோவா வெடிப்பால் உருவான தூசு புகை இன்று வரை வழந்துகொண்டே உள்ளது.
Hubble Space Telescope மூலம், இந்த தூசி மேகங்கள் எவ்வளவு வேகமாக வளர்கின்றன என்ற விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்தார்கள்.
பின்பு இந்த வேகத்தை விஞ்ஞானிக கணித்து, இது சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து இருக்கும் என்று கண்டுபிடித்தார்கள்.
Supernova Remnant 1E 0102
Small Magellanic Cloud நம்ம Milkyway-யோட ஒரு சாட்டிலைட் கேலக்ஸி ஆகும். இது நம்ம பூமியிலிருந்து சுமார் 2 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.
Small Magellanic Cloud அல்லது (Nubecula Minor) நுபிகுலா மைனர் என்பது பால்வீதிக்கு அருகிலுள்ள ஒரு Dwarf Galaxy ஆகும்.
பல நூறு மில்லியன் நட்சத்திரங்களைக் கொண்ட இந்த Dwarf Irregular Galaxy என வகைப்படுத்தப்பட்ட, SMC சுமார் 7,000 ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்டது.
இந்த Small Magellanic Cloud தான் இந்த சூப்பர் நோவா வெடிப்பு நிகழ்ந்தது.
1E 0102.2-7219 பெயரிடப்பட்ட இந்த துசி மேகங்கள், Einstein Observatory மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தூசி மேகங்களின் வேகத்தை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் Hubble Space Telescope மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார்கள்.
தூரத்தை வைத்து ஆய்வு
சுமார் பத்து வருடம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆக்சிஜன் அதிகமாக இருந்த பகுதிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தார்கள். இந்த ionized oxygen தான் Visible ligh-ல் மிகவும் பிறகசமான தெரியும்.
இந்த ஆராய்ச்சிக்காக ஆக்சிஜன் அதிகமாக பயணிக்கு பகுதிகளில் சுமார் 22 இடத்தை விஞ்ஞானிகள் முதலில் கண்டுபிடித்தார்கள்.
பின்பு அந்த நிகழ்வ Reverse செய்து சூப்பர்நோவா நடந்திருக்க வேண்டிய மையத்தைக் கண்டு பிடித்தார்கள்.
மேலும், இந்த மையத்துக்கும், தூசி மேகத்துக்கும் இருக்கிற தூரத்தை வைத்து அதன் பரவும் வேகத்தைக் கண்டு பிடித்தார்கள்.
இது தவிர இந்த சூப்பர் நோவா வெடிப்பினால் உருவான Neutron star வெடிப்புக்கு பின், அது உருவான இடத்திலிருந்து எவ்வளவு வேகமாக விழகி சென்றிருக்கும் என்று கண்டுபிடித்தார்கள்.
இந்த Neutron star மணிக்கு சுமார் 31 லட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணித்து இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Hubble Space Telescope மூலம் பயன்படுத்தபட்ட வண்ண தகவல்
Hubble Space Telescope -ல் உள்ள WFC3 / UVIS கருவியில் இருந்து தனிப்பட்ட உமிழ்வுகளின் மூலம் இந்த படங்கள் எடுக்கப்படது ஆகும்.
குறுகிய அலைநீள வரம்புகளை மாதிரியாக்க பல Filter-கள் பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஒற்றை வண்ண படத்திற்கும் வெவ்வேறு வண்ணங்களை ஒதுக்குவதன் மூலம் வண்ணம் படங்கள் எடுக்கப்படது.
கீழ்கண்ட ஒதுக்கப்பட்ட வண்ணங்கள்:
- நீலம்: F467M + FQ492N
- பச்சை: F502N + F657N
- மஞ்சள்: F665N
- சிவப்பு: FQ508N; F673N