வால்மீன்கள் கனரக உலோக வளிமண்டலத்தைக் கொண்டுள்ளன:
வால்மீன்கள் கனரக உலோக வளிமண்டலத்தைக் கொண்டுள்ளன
Comets Have A Heavy Metal Atmosphere: கனரக உலோக நீராவிகள் எதிர்பாராத விதமாக நமது சூரிய குடும்பம் முழுவதும் Comets-ல் காணப்படுகின்றன.
ஐரோப்பாவின் தெற்கு ஆய்வகத்தின் பெரிய தொலைநோக்கி ESO-இன் Very Large Telescope(VLT) தரவைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில், சூரியனிலிருந்து தொலைவில் உள்ள Comets வளிமண்டலங்களில் இரும்பு மற்றும் நிக்கல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்
ESO தரவைப் பயன்படுத்தி ஒரு போலந்து குழு மேற்கொண்ட தனி ஆய்வில், பனி விண்மீன் comet 2I/Borisov-ல் நிக்கல் நீராவி இருப்பது தெரியவந்தது.
தொலைதூர (Comets)வால்மீன்களின் குளிர்ந்த வளிமண்டலங்களில் இரும்பு மற்றும் நிக்கல் நீராவி காணப்படுவது இதுவே முதல் முறை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் கவனித்த அனைத்து வால்மீன்களின் வளிமண்டலத்தில் இரும்பு மற்றும் நிக்கல் அணுக்களைக் கண்டுபிடித்தது விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது.
வால்மீன்களில் தூசி மற்றும் பாறைகளில் கன உலோகங்கள் இருப்பதை நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், திட உலோகங்கள் பொதுவாக குறைந்த வெப்பநிலையில் திடமானதாக இருக்கும், அவை சூரியனில் இருந்து நீண்ட தூரம் பயணிக்கும் குளிர் வால்மீன் வளிமண்டலங்களில் காணப்படுவதை விஞ்ஞானிகள் எதிர்பார்க்கவில்லை.
சூரியனில் இருந்து 480 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும் வால்மீன்களில் நிக்கல் மற்றும் இரும்பு நீராவிகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வால்மீன்களின் வளிமண்டலங்களில் விஞ்ஞானிகள் ஏறக்குறைய சம அளவு இரும்பு மற்றும் நிக்கலைக் கண்டறிந்தது உள்ளனர்.
மேலும், நமது சூரிய மண்டலத்தில் உள்ள பொருட்கள் மற்றும் விண்கற்களில் பொதுவாக நிக்கலை விட இரும்புச்சத்து 10% அதிகமாக உள்ளது.
எனவே இந்த புதிய கண்டுபிடிப்பு முடிவுகள் ஆரம்பகால சூரிய மண்டலத்தைப் பற்றிய வானியலாளர்களின் புரிதலுக்கான தாக்கங்களைக் கொண்டுள்ளது, இருப்பினும் இந்த குழு இன்னும் என்னவென்று டிகோட் செய்து வருகிறது.
ஆராய்ச்சியாளர்கள் குழு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த “புதைபடிவங்களை” ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், அவற்றின் வளிமண்டலத்தில் நிக்கல் மற்றும் இரும்பு இருப்பதை இது இதுவரை கண்டறியவில்லை.
பொதுவாக, ஒரு வால்மீனின் கருவில் இரும்பு மற்றும் நிக்கல் உள் ஆழமாக உள்ளன. ஆனால் இந்த கன உலோகங்கள் எவ்வாறு மேற்பரப்பில் வந்து வளிமண்டலத்தில் உயர்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு குலப்பம்.
பெல்ஜிய வானியலாளர்கள் குறைந்த அளவு வெப்பநிலையில் இரும்பு மற்றும் நிக்கல் சம அளவு பதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் ஆராய்ந்த வால்மீன்களின் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்படாத ஏதோ ஒன்று இருப்பதாகவும் நம்புகின்றனர்.
European Southern Observatory(ESO)-இன் வரவிருக்கும் மற்றும் தற்போது வடக்கு சிலியில் உள்ள Atacama பாலைவனத்தில் கட்டுமானத்தில் உள்ள பெரிய தொலைநோக்கியான Extremely Large Telescope (ELT).
இதில் உள்ள மிட்-அகச்சிவப்பு ELT இமேஜர் மற்றும் ஸ்பெக்ட்ரோகிராப் (METIS) போன்ற தொலைநோக்கிகள் இதை பற்றி இன்னும் தீர்மானிக்க உதவும்.
2I/Borisov Interstellar Comet:
போலந்து அணியின் மற்றொரு ஆய்வில், Comet 2I/Borisov-ன் வளிமண்டலத்தில் நிக்கல் நீராவியின் தடயங்களை கண்டுபிடித்தனர்.
Comet 2I/Borisov முதல் உறுதிப்படுத்தப்பட்ட Interstellar comet ஆகும். இதை ஆகஸ்ட் 30, 2019 அன்று கிரிமியன் அமெச்சூர் வானியலாளர் ஜெனடி போரிசோவ் கண்டுபிடித்தார்
Comet 2I/Borisov நமது சூரிய மண்டலத்தை கடந்து செல்லும் இரண்டாவது அறியப்பட்ட Interstellar பொருளாகவும் – முதலில் உறுதிப்படுத்தப்பட்ட Interstellar (comet)வால்மீனாகவும் கருதப்பட்டது.