Meteorites பற்றி உங்களுக்குத் தெரியுமா?
(Meteorites) விண்கல் என்றால் என்ன?
ஒரு விண்கல் என்பது ஒரு சிறுகோள், வால்மீன் அல்லது விண்கல் போன்ற பொருளின் திடமான குப்பைகள் மற்றும் சிறு துண்டுகள் ஆகும். விண்வெளியில் சுற்றும் ஒரு சிறிய பாறைகள் அல்லது உலோக வகை பொருள் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. இது விண்வெளியில் இருந்து வளிமண்டலம் வழியாக ஒரு கிரகம் மேற்பரப்பை அடைகிறது.
பெரும்பாலான விண்கல் பொருள்கள் நம் வளிமண்டலதிலே ஆவியாகின்றன, ஒரு சில பாறை அளவிலான பெரிய விண்கல் துண்டுகள் தரையில் விழுகின்றன.
பெரும்பாலான விண்கற்கள் சிறுகோள்களிலிருந்து வந்தவை, அவைகள் பல விதமான பாறைகளால் ஆனவை. இவைகள் சூரிய மண்டலம் தோற்றயதில் இருந்து உள்ளன.
தூசி அளவு மிகச் சிறிய விண்கற்கள் பெரும்பாலும் மைக்ரோமீட்டோராய்டுகள் (Micrometeoroids) அல்லது விண்வெளி தூசி என கூறப்படுகின்றன.
இந்த விண்கல் துண்டுகள் வால்மீன் பிறிந்த குப்பைகளின் எச்சங்களாக இருக்கலாம். மற்றும் சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற கிரகங்களுடன் மோதியதால் உருவகியிருக்கலாம்.
இந்த விண்கற்கள் மணிக்கு 10 முதல் 70 கிமீ வேகத்தில் நமது வளிமண்டலத்தில் விழுகின்றன. அதிக வளிமண்டல உராய்வால் வெப்பமடைகின்றன, இது இரவில் ஒளிரும் நீண்ட கோடுகளை போல் ஏற்படுத்துகிறது.
விண்கற்களின் வகைகள்
விண்கற்கள் கீழ் உள்ள மூன்று விதமாக வகைப்படுத்தப்படுகின்றன.
- கல் (பாறையால் செய்யப்பட்டவை)
- உலோகம் (இரும்பைக் கொண்டுள்ளவை)
- உலோகக் கலவைகள் (ஸ்டோனி-களிமண் மண் இரும்பு கொண்டுள்ளவை)
பல்லாசைட் விண்கற்கள் (pallasite meteorites) ஒரு வகை ஸ்டோனி-இரும்பு (உலோகக் கலவைகள்) விண்கல் ஆகும், அவை பெரும்பாலும் நிக்கல் மற்றும் இரும்பினால் ஆனவை. ஆனால் பூமியில் காணப்படும் ஆலிவ் படிகங்களையும் கொண்டிருக்கின்றன.
பிரபலமான விண்கற்கள்
The Allende Meteorite
பிப்ரவரி 8, 1969 அன்று மெக்சிகோ மாநிலமான Chihuahua மீது விழுந்தது. இதுவரை பார்க்காத பெரிய கார்பனேசிய காண்டிரைட் அலெண்டே விண்கல் ஆகும்.
The Fukang Meteorite
Fukang விண்கல் என்பது சீனாவின் Fukang அருகே உள்ள மலைகளில் காணப்பட்ட ஒரு stony–iron விண்கல் ஆகும்.
இது ஒரு வகை ஸ்டோனி-இரும்பு விண்கல் ஆகும், இது ஆலிவின் படிகங்களைக் கொண்டுள்ளது. இது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
The Hoba Meteorite
Hoba West என்று அழைக்கப்படும் Hoba விண்கல், நமீபியாவின் ஓட்ஜோஜான்சுபா (Otjojansuba) பகுதியில், Crotfontaine-க்கு தொலைவில் உள்ள பண்ணையில் விண்கல் அமைந்துள்ளது.
இது பெரிய நிறை காரணமாக, அது விழுந்த இடத்திலிருந்து நகர்த்தப்படவில்லை. இந்த Hoba விண்கல் நிறை 60 டன்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
The Willamette Meteorite
Willamette விண்கல் முதலில் கிளாக்காமாஸ் சினூக் (Clackamas Chinook) பூர்வீக அமெரிக்க பழங்குடியினரால் டோமனோவோஸ் என்று அழைக்கப்பட்டது. இது அமெரிக்க மாநிலமான Oregon-ல் உள்ள உலகின் மிகப்பெரிய ஆறாவது இரும்பு-நிக்கல் விண்கல் ஆகும்.
விண்கற்கள் பற்றிய உண்மைகள்
- மில்லியன் கணக்கான விண்கற்கள் நமது வளிமண்டலத்தின் வழியாக பயணம் செய்கின்றன.
- வானத்தின் ஒரே பகுதிகளில் நிகழும் பல விண்கற்களின் தோற்றம் “விண்கல் மழை (meteor shower)” என்று அழைக்கப்படுகிறது.
- பல வால்மீன்கள் அவை சூரிய மண்டலத்தைச் சுற்றும்போது குப்பைகளை விட்டு விடுகின்றன. பூமியின் சுற்றுப்பாதை வால்மீனின் சுற்றுப்பாதையை கடக்கும்போது மழை பெய்யும்.
- பெரும்பாலான விண்கற்கள் கல், கல்-இரும்பு அல்லது இரும்பு மூன்று வகைகளில் உள்ளன.
- ஒரு விண்கல் நமது வளிமண்டலத்தில் விலும்போது 2,09,215 KM வேகத்தில் பயணிக்க முடியும்.
- ஆண்டு தோறும் வளிமண்டலத்தை கடந்து தரையை அடையும் 500 மதிப்பிடப்பட்ட விண்கற்களில், சில விண்கற்கள் மட்டும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.