இஸ்ரோ புதிய செயற்கைக்கோள் ஒப்பந்தம்.
ISRO New Satellite Deal
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் 4 புதிய வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது (ISRO New Satellite Deal). இந்த செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்க பயன்படுகிறது.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து நான்கு வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.
பி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள்:
தற்போது ஒப்பந்தத்தில் உள்ள நான்கு வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் தலைவர் ஜி.நாராயணன் தெரிவித்தார்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட புதிய வாடிக்கையாளர்களின் பெயர்களை வெளியிடவும் நிறுவனம் மறுத்துவிட்டது.
New Space India Limited
விண்வெளி பயணம் மிகவும் மலிவான விலையில் செய்யப்படுவதால் இஸ்ரோ சமீபத்தில் இதை ஒரு தனி வணிகமாகத் தொடங்கியது.
இஸ்ரோ தயாரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் தனியார் நிறுவனங்களான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் பெங்களூரைச் சேர்ந்த அரசு நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் மூலம்தான் இஸ்ரோ தனியார் மற்றும் பிற தேசிய செயற்கைக்கோள் ஏவுதல்களை மேற்கொண்டு வருகிறது.