Neutron Stars எதிர்பார்த்ததை விடப் பெரியதாக இருக்கலாம்.
ஈயக் கருவின் அளவின்படி, Neutron Stars எதிர்பார்த்ததை விடப் பெரியதாக இருக்கலாம்.
நம் யுனிவர்சில் ரொம்ப அடர்த்தியான விண் பொருட்கள் வரிசையில் Black Hole-க்கு அடுத்த படியாக இருப்பது Neutron Star.
இந்த அதிபயங்கர அடர்த்தி கொண்ட நட்சத்திரங்களின் எடை நாம் மூன்பு கணிததை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நட்சத்திரத்தோடு எரிபொருள் தீர்ந்த உடனே ஈர்ப்புவிசை அழுத்தத்தை தாங்க முடியாமல் அது வெடிக்கும்.
நம்ம சூரியனை விட பத்து மடங்குக்கு அதிக எடை உள்ள நட்சத்திரம் வெடிக்கும் போது அது ஒரு Black Hole அல்லது ஒரு Neutron Star-கவோ உருமாறும்.
Neutron Star-கள் அளவில் ரொம்ப சின்னதா இருக்கும். உதாரணத்துக்கு, Crab Nebula இருக்குற Crab Pulsar என்ற ஒரு Neutron Star வெறும் 20 கிலோமீட்டர்கள் அளவுக்கு நீளமாக இருக்கும்.
ஆனால் அது நம்ம சூரியனை விட ஒன்றரை மடங்கு அதிக எடை கொண்டது. நாசாவின் “Neutron Star Interior Composition Explorer” என்ற டெலஸ்கோப் தான் இதுபோன்ற Neutron Star-கள் ஆராய்ச்சிகளுக்காக உபயோகிக்கப்பட்டது.
இந்த டெலஸ்கோப் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் Neutron Star-கள் உடல் எடையையும், அளவையும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கின்றனர்.
இதுவரைக்கும் செய்த ஆய்வில் மூலமாக Neutron Star-கள் எவ்வளவு அளவுக்கு நீலமாக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது.
U.S அணு இயற்பியலாளர்கள் ஈயத்தின் புதிய அளவீடு
|
போன மாதம் April அன்று நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் Neutron Star-கள், ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட கொஞ்சம் பெரிதாய் இருக்கும் என்று விஞ்ஞானிகள் அறுவித்தார்கள்.
இந்த ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் நேரடிய Neutron Star-களை ஆய்வு செய்யாமல், அதுக்கு பதிலாக ரொம்ப அடர்த்தியான Atom-களை கொண்ட (ஈயம்) Lead Chemical ஆய்வு செய்தார்கள்.
மேலும், இந்த ஆராய்ச்சியில் ஈயம் அணுக்களில் உள்ள Neutron-களை சுத்தி இருக்குற Neutron Layer-ரை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வு மூலமாக ஈயத்துடைய அணுக்களில் இருக்கிற Neutron-களும் மேல்பரப்பு 0.28 Femtometer அளவுக்கு தடிமனானது என்ன கணித்துள்ளனர்.
Neutron Star அளவு வேறுபாடு:
ஏற்கனவே கணிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிக அளவு. புதுசாக கணிக்கப்பட்ட Neutron-களின் மேல் பரப்பு அளவுகளை கொண்டு, விஞ்ஞானிகள் Neutron Star-களின் அளவே நேரடியாக கணிக்க முடியாது.
ஏன் என்றால், Neutron Star-கள் அடர்த்தி ரொம்ப அதிகம். இருந்தாலும் கடினமான கணித முறைகளை வைத்து விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
ஏற்கனவே கணிக்கப்பட்டு சுமார் 12 கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட ஒரு Neutron Star உண்மையில் 14 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த கணிப்புகள் ஆரம்பம் தான், எதிர்காலத்தில் இன்னும் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்ட பிறகு இந்த ஆய்வு இன்னும் அதிகமக நடத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.